வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வினவு தளத்தின் சிண்டு முடியும் வேலை.


வினவின் கோணல் பார்வை கட்டுரை.
www.vinavu.com/2011/09/23/pdk/

முத்துராமலிங்கம் குறித்து மரியாதைக்குரிய தோழர் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் கூறியதாக வினவு சொல்லுவது உண்மையாக இருந்தால் அது அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாம்.ஆனால் கழகத்தை பொறுத்தமட்டில் தலைவர் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக மேடைகளில் உறுதியாக சொல்லுவது ''காந்தி நினைவுநாள் என்று சொல்லுவதே மோசடியானது.காந்தியை கோட்சே என்கிற இந்துமத பார்ப்பன வெறியன் சுட்டுக்கொன்ற நாள் என்பதுதான் உண்மை.அதுபோல இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் என்பதும் மோசடியானது.இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கம் என்கிற சாதி வெறியன் கொலை செய்த நாள் என்பதுதான் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டியது''இதுதான் பெதிகவின் நிலைப்பாடு.மறுப்பு அறிக்கை விடுவதில் கழகத்திற்க்கு ஒன்றும் தயக்கமோ சிக்கலோ இருக்காது.
இம்மானுவேல் கொலை குறித்து தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் உரை காணொளி : www.youtube.com/watch?v=LfPLx4wftO4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக