ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மாவீரன் திலீபன்.


''திலீபன்''.
பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

மாவீரன் திலீபன் முன் வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் :-
1)மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2)சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3)அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4)ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5)தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
''மாவீரன் திலீபன் வீரமரணம் முழு காணொளி'',

சனி, 24 செப்டம்பர், 2011

கிராமங்கள் ஒழிய வேண்டும் - பெரியார்


கிராமம் என்பது மிக பரிதாபகரமான காக்ஷியாகும். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் வேறு என்ன நன்மை கிராமக்காரனுக்கு இருக்கிறது? கால்நடை வளர்ப்பைப்பற்றி கிராமவாசிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னார், கால்நடைகள் வளர்க்கப்பட்டால் கிராமத்துக்கு என்ன லாபம்? பட்டணத்தில் இருப்பவன்தான் பால், தயிர், மோர், நெய் நன்றாக சாப்பிடுவான். கிராமத்தான் சாதத் தண்ணீர் விட்டுத்தான் சாப்பிடுவான். அதுதான் உடலுக்கு பலம் தருமென்று அவன் கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஒரு கிராமத்தான் குழந்தை தனக்கு கொஞ்சம் நெய்விடும்படி கேட்டால் அவன் தாய்க்கு உடனே கோபம் வந்துவிடும். "உனக்கு நெய்யை ஊற்றிவிட்டால் நாளைக்கு நெய்க்கார மாப்பிள்ளைக்கு என்ன ஊற்றுவது" என்று கேட்பாள். (நெய்க்கார மாப்பிள்ளை என்றால் கிராமங்களில் சுற்றி நெய் வாங்கிக்கொண்டு போய் பட்டணங்களில் விற்கும் நெய் வியாபாரி) இவ்வளவு சிக்கனமாக கிராமத்தார்கள் பிழைத்தும் பயன் என்ன? மீத்து வைத்த பணங்களை வக்கீல்களும், போலீஸ்களும், ரிவினியு கிரிமினல் அதிகாரிகளும் கொள்ளை அடித்துக் கொண்டு போதாக்குறைக்கு அவர்களிடம் பாண்டு எழுதிக் கொள்ளுகிறார்கள்.

கிராமவாசிகளின் சௌகரியத்தைப் பாருங்கள். அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடையாது, வெளிச்சம் கிடையாது, சுகாதாரம் கிடையாது, நாடகம் கிடையாது, சினிமா கிடையாது, பார்க்கு, சிங்காரத் தோட்டம் கிடையாது. அதிகாலையில் இருட்டில் போகவேண்டும், அந்தியில் இருட்டின பிறகு வீட்டுக்கு வரவேண்டும். அவனால் அரசன், வியாபாரி, லேவாதேவிக்காரன், மற்ற உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் பிழைக்கிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு பட்டணத்தில் வசிக்கும் ஒரு கக்கூசுக்காரன், தெருக் கூட்டி, மேஸ்திரி ஆகியவர்களுக்கு இருக்கும் சௌகரியமும் இல்லை. ஜாதிமுறையில் பறையன் என்றொரு ஜாதி வருணாச்சிரம முறையில் வகுத்திருப்பது போலவே கிராமம் கிராமத்தான் என்கின்ற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ்ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமம் என்பதாக ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. பட்டணத்தான் சௌகரியத்துக்கு என்பதல்லாமல் மற்றபடி கிராமம் எதற்கு என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட கிராமங்களை எல்லாம் அழித்துவிடவேண்டும், எல்லோரையும் பட்டணங்களுக்கு போகும்படி செய்யவேண்டும். அதுதான் கிராம சீர்திருத்தம் என்பேன். "கிராமங்களுக்குப் போ" என்பது இப்போது ஜன தலைவர்கள் என்பவர்கள் உபதேசமாக இருக்கிறது. இதில் ஏதாவது நாணயம் இருக்க முடியுமா? B.A.யும், M.A.யும் கிராமத்துக்குப் போய் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? கூடவே காப்பி, கோக்கோ, சிகரட்டு, பீடி, கிராமபோன், ரேடியோ கொண்டுபோனால் ஒழிய அங்கு அரை நிமிஷம் B.A., M.A.க்காரன் தங்க முடியுமா? இல்லா விட்டால் தலைவலி, உடல் வலி, தூக்கம் பிடியாமை, மூளை வேலை ஓடாமை என்கின்ற வியாதி வந்துவிடாதா? B.A., M.A. படிப்புக்கும் கிராம முன்னேற்ற வேலைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா. இவர்கள் கிராமத்துக்குப் போவதால் கிராமக்காரனுக்கு அதிக தொல்லையே அல்லாமல் இவனால் நல்லது என்ன ஆகக்கூடும்?

விவசாய விஷயத்தில் B.A., M.A.க்கு என்ன தெரியும்? கால்நடை விஷயத்தில் என்ன தெரியும்? சுகாதார விஷயத்தில் என்ன தெரியும்? இவன் சொன்னால் கிராமத்தான் கேட்க வேண்டாமா? அவன் புத்தி பழமையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது B.A., M.A. யாருக்குச் சொல்லுவான்? சொன்னபடி கிராமத்தான் கேட்பதாயிருந்தாலும், அந்தப்படி செய்ய இருவருக்கும் பணம் முதலிய சாதன சௌகரியங்கள் எங்கே என்று பாருங்கள். கிராமங்களுக்கு போ என்பது ஒரு பித்தலாட்டமான சொல், அல்லது அர்த்தமற்ற சொல். கிராமத்தானுக்கு இருக்கும் பழமைப்பித்தும், மூடநம்பிக்கையும் ஒழிய வேண்டும்.

இன்றைய B.A., M.A.யும் மூடநம்பிக்கைக்காரனாகவே இருக்கிறான். பழமை பித்தனாகவே இருக்கிறான். பழமைப் பித்துதான் இன்று தேசியமாய் இருக்கிறது. அதை போதிப்பதிலேயே எல்லோரும் ஜனத்தலைவர்களாகி விடுகிறார்கள். இன்று கிராமப்புனருத்தாரண வேலையில் முதல் திட்டம் எல்லோரும் பனங்கருப்பட்டியும் கைக்குத்து அரிசியும் சாப்பிடவேண்டும் என்பதாகும். இதற்கு யார் ஒப்புவார்கள்? இத்தனை பேருக்கும் கைக்குத்து அரிசிக்கு எத்தனை பேர் குத்தவேண்டும்? ஆண் பிள்ளைகள் நெல் குத்துவார்களா? பெண்கள்தான் இனி நெல் குத்துவார்களா? பட்டணங் களிலுள்ள பெண்கள் முறத்தகலம் பட்டுக்கரை சீலையும், வைர நகைகளையும் பூட்டிக்கொண்டு ஆர்மோனியம், வீணை, சதுர்ப்பாட்டு, கதை காலக்ஷேபம் பழகிக்கொண்டு உல்லாசமாய் கேளிக்கையில் இருக்கும்போது கிராமத்து பெண்களை நெல்லுக்குத்தவும், கருப்பட்டி காய்ச்சவும் சொன்னால் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்? சில மூடங்கள் கேட்பதாகவே வைத்துக்கொண்டாலும் நாம் சொல்வது தான் யோக்கியமாகுமா?

கிராமத்தில் பிறந்ததற்கு ஆக நெல் குத்த வேண்டியதா என்று கேட்கின்றேன்.

ஒரு தோழர் கிராமக் கைத்தொழிலைப் பற்றி பேசினார். கிராமக் கைத் தொழில் என்று ஒன்று ஏன் இருக்க வேண்டும்? பட்டணத்துக்காரனுக்கு எந்திரத் தொழிலும், கிராமத்தானுக்கு கைத்தொழிலும் என்று யார் சிருஷ்டித்தார்கள்? ஏன் அப்படி சிருஷ்டிக்கவேண்டும்? ராட்டினம் சுற்றுவதும், தொடையில் கயிறு திரிப்பதும், மண்வெட்டியிலும், கோடாலியிலும், சுத்தியிலும், மண்வெட்டி, மரம் பிளந்து கல் உடைப்பதும்தான் கிராமத்தானுக்கு சொந்தமா இது தான் கிராம முன்னேற்றமா என்று கேட்கின்றேன். எவ்வித முன்னேற்ற முயற்சியும் இல்லாமல் பட்டணத்தான் எவ்வளவு கொள்ளை அடிக்கிறான். வியாபாரி, லேவாதேவிக்காரன், வக்கீல், வைத்தியன், அதிகாரி, உத்தியோகஸ்தன் ஆகியவர்களின் கொள்ளையை பாருங்கள். இதை ஒழிப்பதல்லவா கிராம முன்னேற்றமாகும். இந்தக் கூட்டத்தாரல்லவா கிராமங்களை கசக்கிப் பிழிகின்றவர்கள். இதைவிட்டுவிட்டு இந்த சாதாரண வாத்தியார்கள் அதிலும் கஞ்சிக்குப் போதாத ஏழை வாத்தியார்கள் மாதம் 15 ரூபாய்க்கு தாளம் போடும் இந்த வாத்தியார்கள் கிராமத்திற்குப் போய் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

ஏதாவது நீங்கள் கிராமத்துக்குப்போய் செய்ய வேண்டுமானால் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழியுங்கள் மூடநம்பிக்கையை அகற்றுங்கள். அவர்களை பட்டணவாசிகள் எப்படி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி கண்விழிக்கச் செய்யுங்கள். தலைவிதியை மறக்கடித்து பகுத்தறிவை உண்டாக்குங்கள், அவர்களையெல்லாம் பட்டணங்களுக்கு குடிபோக விரட்டுங்கள். இவ்வளவு நீங்கள் செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது. உங்களுக்கும் அதற்கு மேல் சக்தி இருக்காது. சௌகரியமும் சாதனமும் கிடையாது.

உதாரணமாக இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு மீட்டிங்குக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள். அவர் களின் 375 பேர்களுக்கு நரம்புச் சிலந்தி நோய் இருந்தது. அந்த ஊர்க்கிணறு, கிணற்று தண்ணீர் மேலே வருவதைவிட மேலேயிருக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் சுலபத்தில் போகத் தகுந்த மாதிரியான மேயோ கிணறாகும். அதன் தண்ணீரை பரிசுத்தம் செய்ய யாருக்கும் புத்தி கிடையாது. உபாத்தியாயர் ஒருவர் இருந்தார். அவரும் காலில் கட்டுப்போட்டுக் கொண்டுதான் இருந்தார். நான் கேட்டதற்கு அவர் கவனிக்கிறதற்கு ஒருவருமில்லை நான் என்ன செய்ய முடியுமென்று பதில் சொன்னார். இவைகள் எல்லாம் அரசாங்கத்தை பொறுத்த வேலையே ஒழிய பொது ஜன சேவையால் ஆகக்கூடிய காரியமோ, ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரால் ஆகக்கூடிய காரியமோ அல்ல. அரசாங்கத்தின் கையில் இருந்த பொறுப்பை ஜனத் தலைவர்கள் என்பவர்கள் பிடுங்கிக்கொண்டு தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இவைகள் மாற்றமடைய வேண்டுமானால் பகுத்தறிவை மக்களுக்கு போதியுங்கள் என்பதுதான் எனது ஆசை. பகுத்தறிவு விஷயத்திலும் நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்கள். அது விஷயத்தில் உங்கள் அறிவுப்படி நீங்கள் போதிக்க முடியாது. உங்கள் அறிவுப்படி நீங்கள் நடக்கவும் முடியாது என்கின்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு உபாத்தியாருக்கு மூன்று புத்தி இருக்கின்றன.

அதாவது அவருக்கு சரியென்று தோன்றும் ஆராய்ச்சி புத்தி ஒன்று. பிள்ளைகளுக்கு இன்னபடிதான் கற்பிக்கவேண்டும் என்று படிப்பித்த நிர்பந்த புத்தி இரண்டு. தனக்கு தோன்றுகிறபடியும் தான் படிப்பிக்கிறபடியும் நடக்க முடியாத பழமைப்பித்தும் கட்டுப்பாட்டு நிபந்தனையும் கொண்ட கோழைப் புத்தி மூன்று. இந்த மூன்று புத்திகளுடன் நீங்கள் கிராமங்களை புனருத்தாரணமோ சீர்திருத்தமோ செய்வதென்றால் அது பயப்படக்கூடிய காரியம் தான். ஆனாலும் பகுத்தறிவை பயன்படுத்த தைரியம் கொண்டு விட்டால் இந்த கஷ்டங்கள் சுலபத்தில் ஒழிந்துபோகும் என்றே நினைக்கிறேன்.

குறிப்பு: 23.07.1936 இல் லண்டன் மிஷன் காம்பௌண்ட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஈரோடு லண்டன் மிஷன் போதனா முறை பாடசாலை லிட்டரரி சொசைட்டியின் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை.

குடி அரசு சொற்பொழிவு 02.08.1936

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஆபாச பார்ப்பன இந்துமத பார்பனர்களின் காட்டுமிராண்டித்தன பாலியல் வன்கொடுமைகள்


ஆபாச பார்ப்பன இந்துமதத்தின் அடிப்படையே முழு ஆபாச அருவெருப்பு கதைகள்தான்.கோவிலில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் ஆபாசமானவை.ஆபாச கதைகளை படித்து விட்டு,ஆபாச சிலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பார்ப்பன நாய்கள் இப்படித்தான் நடந்துகொள்ளும்.இவன்களுக்கு ''தட்சணை'' போடப்போட இப்படித்தான் கொழுத்துப்போய் நடந்துகொள்வார்கள்.இவனுக்கு தண்டனை தருவதை விட அந்த கோவிலை இடித்து தள்ளுவது தான் சரியான தீர்வு.பெரியார் சொல்லுகிறார்,''கொசுவை ஒழிக்கவேண்டுமானால் அது உற்பத்தியாகும் குட்டையை ஒழித்தால்தான் கொசு ஒழியும்''.

குடியாத்தம், செப்.23: குடியாத்தம் காளியம்மன்பட்டி ராஜிவ்நகரைச் சேர்ந்த ராஜா-அனிதா இணையரின் 5 வயது மகள் ராஜேஸ்வரியைக் கொலை செய்த குற்றத்துக்காக குமார் என்ற கோவில் குருக்கள் கைது செய்யப் பட்டுள்ளார்.

பாண்டியன் நகரில் உள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜேஸ்வரி 2 நாட்களுக்கு முன்பி லிருந்து காணாமல்போய்விட்டார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பள்ளிக்கு அருகில் 100 அடி தூரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மஞ்சள் சாக்கு மூட்டையில் சிறுமி ராஜேஸ்வரியின் பிணம் கைப்பற்றப் பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.

காவல்துறை விசாரணை மேற் கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார் என்ற கோவில் குருக்கள் தலைமறைவானது தெரிய வந்தது. அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். சிறுமியைத் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி ராஜேஸ்வரி பள்ளியில் இருந்து சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது அவளுக்கு சாக்லேட் கொடுத்து பள்ளிக்கு அருகில் உள்ள தனது வீட்டுக்கு குமார் அழைத்துச் சென்று, சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றபோது சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமி தன்னைப் பற்றி வெளியில் சொல்லிவிடுவாளோ என்ற அச்சத்தில் சிறுமியை அவள் வாயைப் பொத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சிறுமியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி பள்ளிக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டார்.

வினவு தளத்தின் சிண்டு முடியும் வேலை.


வினவின் கோணல் பார்வை கட்டுரை.
www.vinavu.com/2011/09/23/pdk/

முத்துராமலிங்கம் குறித்து மரியாதைக்குரிய தோழர் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் கூறியதாக வினவு சொல்லுவது உண்மையாக இருந்தால் அது அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாம்.ஆனால் கழகத்தை பொறுத்தமட்டில் தலைவர் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக மேடைகளில் உறுதியாக சொல்லுவது ''காந்தி நினைவுநாள் என்று சொல்லுவதே மோசடியானது.காந்தியை கோட்சே என்கிற இந்துமத பார்ப்பன வெறியன் சுட்டுக்கொன்ற நாள் என்பதுதான் உண்மை.அதுபோல இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் என்பதும் மோசடியானது.இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கம் என்கிற சாதி வெறியன் கொலை செய்த நாள் என்பதுதான் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டியது''இதுதான் பெதிகவின் நிலைப்பாடு.மறுப்பு அறிக்கை விடுவதில் கழகத்திற்க்கு ஒன்றும் தயக்கமோ சிக்கலோ இருக்காது.
இம்மானுவேல் கொலை குறித்து தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் உரை காணொளி : www.youtube.com/watch?v=LfPLx4wftO4