ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியிலும், ஆதிக்கத்திலும் இருந்த சங்கீதத்தை உழைக்கும் மக்களின் இசையாக தமிழகத்தின் தெருக்களில் உலவ விட்டவர் இளையராஜா என்றால்,நீங்கள் சர்வதேச அளவுக்கு உயர்த்திய திறமைசாலி.அதற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளீர்கள்.நீங்கள் தமிழன் என்பதனால் பெருமைப்படுவதாக இங்குள்ள ஓட்டு கட்சி தலைவர்களும்,ஊடகங்களும் சேர்ந்து ஒரு சேர வாழ்த்துகிறார்கள்.
காவல்துறை தடியடி, அய்யாவின் உண்ணாவிரதம், அம்மாவின் அர்ச்சனைகள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன.அனைத்து தலைப்பு செய்திகளிலும் தாங்களே.இனி வரும் வாரங்களில் உங்களின் படமே அனைத்து வார இதழ்களின் அட்டைகளிலும் இருக்கும்.தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும்.
தாங்கள் ஒரு தமிழன் அதற்காக மகிழ்கிறோம் என்று இந்த தலைவர்கள், ஊடகங்கள் சொல்வதனாலும், தாங்கள் ஒரு தமிழன் என்பதனாலும், உணர்வுடன் ஒரு கேள்வி.
தாங்கள் ஏன் அன்றாடம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்காக ,தாயின் பிணத்தருகே கதறியழும்,குழந்தைகளுக்காக, மனைவியையும் குழந்தையும் இழந்து நடைபிணமாக அலையும் ஒரு சக மனிதனுக்காக,பெற்ற குழந்தை இறந்த பிறகும் புதைக்கவும் முடியாமல்,அழக்கூட முடியாமல் கண்ணீர் வற்றிப்போய் ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாருக்காக,ஈழத்தமிழருக்காக
தங்களின் "ஆஸ்கார் விருதுகளை ஏன் திரும்ப ஒப்படைக்கக் கூடாது?"
நோபல் பரிசுகளையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னவர்களை,பெற்ற பரிசுகளை திரும்ப ஒப்படைத்தவர்களை பட்டியலிட்டு விட முடியுமே?
உலக நாடுகளை ஈர்ப்பதற்க்கு இங்கே பல்வேறு வகையில் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பான் கீ மூனிடம் 2கோடி கையெழுத்து கொடுத்து ஈர்ப்பதை விட,வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் கவன ஈர்ப்பை விட,பிரான்சில் நடைபெற்ற ஊர்வலத்தின் கவன ஈர்ப்பை விட தங்களின் இந்த செயல் உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்க்கும் என்பது திண்ணம்.வெள்ளை மாளிகை திரும்பிப் பார்க்கும்.ஐ நா சபை உற்று நோக்கும்.ஐரோப்பிய சமூகம் கவனிக்கும்.
ஆதலால் ஏதும் ஈழத்தமிழருக்கு நல்லது நடந்தால் நாங்கள் சொல்வோம் "எல்லா புகழும் ரஹ்மானுக்கே".
"தமிழ் எங்கள் மொழி, இஸ்லாம் எங்கள் வழி" என்று முழக்கமிட்ட காயிதே மில்லத் வாழ்ந்த தமிழ்நாடு இது.
முத்துக்குமரன்,நிலக்கோட்டை பள்ளபட்டி ரவி,சீர்காழி ரவிச்சந்திரன்,சென்னை வண்ணாரப்பேட்டை அமரேசன்,மலேசியா ராஜா,மலேசியா ஜெகனேசன்,ஜெனீவா முருகதாசன்,என்கிற தமிழர்கள் தங்கள் மதிப்பில்லா உயிரையே கொடுத்தார்கள்.
தமிழராகிய நீங்கள் மதிப்புள்ள விருதை திரும்பக் கொடுக்கலாமே?
அப்பொழுதும் நீங்கள் இங்குள்ள உழைக்கும் தமிழர்கள்,ஈழத்தில் உள்ள வதைபடும் தமிழர்கள் மனங்களில் நிரந்தர இடத்தில் இருப்பீர்கள்.
எல்லோரும் உங்களை நன்றியுடன் நினைத்து வாழ்த்துவர்.இதைவிட ஆஸ்கார் விருது என்ன பெரிதா?
யாருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு.ஏன் நீங்கள் பயன்படுத்தக் கூடாது?
உங்களின் திறமைக்கு,உழைப்பிற்கு, ஏற்கனவே இசை உலகில்,மக்கள் உள்ளங்களில் அங்கீகாரம் கிடைத்து விட்டது.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு,ஈழ மக்களின் கோரிக்கைகளுக்கு இன்னும் உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
"கையில் கிடைக்கும் அனைத்தையும் கருவிகளாக்குவோம்" என்றான் மாவோ.
உங்கள் கையில் இன்று ஆஸ்கார்.அதனையும் ஒரு ஆயுதமாக்கலாம்.
அது ஒரு ஆயுதமாவதோ,அலங்காரமாவதோ உங்கள் கையில்.
தமிழில் பேசினீர்கள்.தமிழருக்காகவும் பேசலாமே?
எனக்கு விருது வேண்டாம், எனது மக்களுக்கு விடுதலை தாருங்கள் என்று கூறுவீர்களா?
மதம் மாறியதால் சாதிய இழிவை துடைத்தீர்கள்.
மனம் மாறினால் இன அழிவை துடைப்பீர்கள்.
நாங்கள் எவ்வளவோ நம்பியிருக்கிறோம்.இதையும் நீங்கள் செய்வீர்கள் என நம்பும்
-உண்மைத்தமிழன்
"உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்”
பதிலளிநீக்குவால்டயர் சொன்னதை வழிமொழிகிறேன்.
r.selvakkumar
பதிலளிநீக்குதங்களுடைய வருகைக்கு நன்றி
திரை இசை பற்றிய இஸ்லாமிய கருத்து என்ன ?
பதிலளிநீக்குதிரை இசை ...அதாவது இசைக்கருவிகளை கொண்ட இசையை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. இஸ்லாமில் pop பாடல்களுக்கோ, இசைக்கருவிகளுக்கோ இடமில்லை. இதை பலர் கூறியுள்ளனர்
இயற்கை சப்தங்கள் ...அதாவது பரவை ஒலி, மனித குரல் இவற்றை கேட்கலாம்.
The seventeenth-century Muslim scholar Chelebi distinguishes three categories of music: that coming from birds, from the human throat and from instruments. He states that in Islam it is permissible to listen to the melodies produced by birds, and to those produced by the human throat, subject to certain conditions and rules. To listen to instruments that are blown or struck however, is never permissible
இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்...
மேலும் :
http://amsuruvani.blogspot.com/2009/03/blog-post.html